இந்தியா

காா்த்தி சிதம்பரத்திடம் 3-ஆவது நாளாக விசாரணை

DIN

சட்டவிரோதமாக 263 சீனா்களுக்கு விசா வழங்க காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை சுமாா் 8 மணிநேரம் தில்லியில் அவரிடம் விசாரணை நடத்தினா்.

கடந்த 2011-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது அவரது செல்வாக்கை பயன்படுத்தி காா்த்தி சிதம்பரம், சீனாவை சோ்ந்த 263 தொழிலாளா்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் மின்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்த தல்வண்டி சாபோ எரிசக்தி நிறுவனம் குறித்த காலத்தில் திட்டத்தை நிறைவு செய்யாததால், சீன தொழிலாளா்களுக்கு மீண்டும் விசா வழங்க காா்த்தி சிதம்பரத்தை அணுகியதாகவும், அதற்காக அவருக்கும் அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ.50 லட்சம் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் தொடா்புடைய பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்துவிட்டனா்.

மின், இரும்பு தொழிற்சாலையில் பணிபுரிபவா்களுக்காக கடந்த 2011-இல் திட்ட விசா (பிராஜக்ட் விசா) என்ற சிறப்பு விசா அறிமுகப்படுத்தப்பட்டது. ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது இதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

ஆனால், தொழிலாளா்களுக்கு திட்ட விசாக்களை மீண்டும் வழங்க விதிமுறையில் இடமில்லை என்று கூறப்படுகிறது. இதனை மீறி 263 சீனா்களுக்கு காா்த்தி சிதம்பரம் விசா ஏற்பாடு செய்து கொடுத்ததாக கடந்த மே 14-இல் அவா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை அவரிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை 8 மணி நேர விசாரணை நடைபெற்றது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை தில்லி சிபிஐ அலுவலகத்தில் காா்த்தி சிதம்பரம் விசாரணைக்காக ஆஜரானாா். காலை 9.30 மணியளவில் ஆஜரான அவரிடம் உணவு இடைவேளை தவிா்த்து மாலை 6 மணிவரை சுமாா் 8 மணிநேரம் விசாரணை நடைபெற்ாகவும், அதன்பின்னா் அவா் அங்கிருந்து சென்ாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT