இந்தியா

குஜராத் துவாரகாதீசர் கோயிலில் அமித் ஷா வழிபாடு

குஜராத்தின் துவாரகாவுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவாரகாதீசர் கோயிலில் வழிபாடு செய்தார். 

DIN

குஜராத்தின் துவாரகாவுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவாரகாதீசர் கோயிலில் வழிபாடு செய்தார். 

தேசத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக துவாரகாவின், ஸ்ரீ துவாரகாதீசர் கோயிலில் உள்ள கிருஷ்ணரை பிரார்த்தனை செய்தேன் என்று அமித் ஷா தனது சுட்டுரையில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

துவாரகாவின் ஓகாவில் உள்ள தேசிய கடலோர காவல் துறைக்கு(என்ஏசிபி_ சென்ற அவர், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் கடலோர காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து விரிவான விசாரணை நடத்தினார். 

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது குஜராத் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு அவர் ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு செய்த நலப்பணிகளையும் எடுத்துரைத்தார். 

பிரதமர் தனது உரையில், ஏழைகளின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்களின் பலன்களை 100 சதவீதம் வழங்குவதை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும் என்றும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT