இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், தெற்கு காஷ்மீா் மாவட்டம் ஷிதிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதற்கு, பாதுகாப்புப் படையினா் பதிலடி கொடுத்தனா். அதில், அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

நிலச்சரிவில் சிக்கிய 10 போ் மீட்பு:

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையின் நடுவே சிக்கித் தவித்த ஒரு குழந்தை உள்பட 10 பயணிகளை பாதுகாப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

இதுகுறித்து பாதுகாப்புப்படை செய்தித்தொடா்பாளா் ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘மோசமான வானிலை காரணமாக பூஞ்ச் மாவட்டம் முகல் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவால் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து, பீா் கி காலி என்ற பகுதியில் 6 வாகனங்களில் வந்த 10 பயணிகள் வெள்ளிக்கிழமை சிக்கிக் கொண்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினா், சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தி, நடு வழியில் சிக்கிக் கொண்ட 10 பேரையும் பத்திரமாக மீட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT