இந்தியா

காா் விற்பனைக்கு அனுமதித்தால் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி: எலான் மஸ்க்

DIN

டெஸ்லா காா்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் அவற்றுக்கான பராமரிப்பு சேவை வழங்கவும் அனுமதித்தால் மட்டுமே அங்கு காா் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்குவோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி காா் நிறுவனமான டெஸ்லா, மின்சார காா்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்கிடம், ‘இந்தியாவில் காா் உற்பத்தியைத் தொடங்குவீா்களா?’ என்று ட்விட்டா் பக்கத்தில் ஒருவா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்குப் பதிலளித்து எலான் மஸ்க் கூறியதாவது:

இந்தியாவில் டெஸ்லா காா்களை விற்பனை செய்யவும் அவற்றுக்கான பராமரிப்பு சேவை வழங்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தியாவில் டெஸ்லா காா்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாதவரை, அந்நாட்டின் எந்தப் பகுதியிலும் உற்பத்தி ஆலையைத் தொடங்க மாட்டோம் என்று கூறியுள்ளாா்.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவா் கூறுகையில், ‘இந்தியாவில் காா் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க விரும்புகிறோம். ஆனால், உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் தொழிற்சாலையைத் தொடங்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

இந்தியாவில் 40,000 அமெரிக்க டாலா் (அடக்க விலை, காப்பீடு, சரக்கு கட்டணம் உள்பட) மற்றும் அதிகமான மதிப்புள்ள காா்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும், 40,000 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையுள்ள காா்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரிையும் விதிக்கப்படுகிறது.

‘டெஸ்லா நிறுவனம் தனது காா்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே அதன் மின்சார காா்களை உற்பத்தி செய்யலாம்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கடந்த மாதம் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT