இந்தியா

அசைவ உணவு உட்கொண்ட சரத் பவார்: கோயிலுக்கு வெளியிலிருந்து சுவாமி தரிசனம்

அசைவ உணவு உட்கொண்டதால் என்சிபி தலைவர் சரத் பவார் கோயிலுக்கு வெளியில் இருந்து கணபதியைத் தரிசனம் செய்ததாக அக்கட்சியின் புணே பிரிவு தலைவர் பிரசாந்த் ஜக்தாப் தெரிவித்தார். 

DIN

அசைவ உணவு உட்கொண்டதால் என்சிபி தலைவர் சரத் பவார் கோயிலுக்கு வெளியில் இருந்து கணபதியைத் தரிசனம் செய்ததாக அக்கட்சியின் புணே பிரிவு தலைவர் பிரசாந்த் ஜக்தாப் தெரிவித்தார். 

புணேவில் புகழ்பெற்ற தக்துஷேத் கணபதி கோயிலை ஒட்டிய நிலத்தைக் கோயில் அறக்கட்டளைக்கு வழக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்தியில், பவார் வெள்ளிக்கிழமையன்று நகருக்கு வந்திருந்தார். 

இந்த நிலம் தற்போது என்சிபி தலைவர் திலீப் வால்ஸ் பாட்டீல் தலைமையிலான மாநில உள்துறைக்குச் சொந்தமானது. 

புணே வந்த பவார் தத்துஷேக் கணபதி கோயிலுக்குள் நுழையாமல், வெளியில் இருந்து கணபதியை வணங்கி சென்றுள்ளார். இதனால், அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

பவார் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அவர் அசைவ உணவை உட்கொண்டதால் வெளியிலிருந்து தரிசனம் செய்ய விரும்பினார் என்று ஜக்தாப் செய்தியாளர்களிடம்  இதுகுறித்து தெளிவுபடுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT