இந்தியா

சத்யேந்தர் ஜெயின் கைதுக்கு அரசியல் உள்நோக்கமே காரணம்: கேஜரிவால்

சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு போலியானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். 

DIN

சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு போலியானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். 

இதுதொடர்பாக கேஜரிவால் அரசு சாலை மேம்பாட்டுத் திட்ட ஆய்வின்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தனது அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால். இந்த வழக்கு முற்றிலும் போலியானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். 

ஆம் ஆத்மி கட்சி நேர்மையான அரசியல் கட்சி என்றும், இந்த வழக்கில் ஒரு சதவிகிதம் உண்மை இருந்திருந்தால் கூட, தானே முன்வந்து ஜெயின் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன்.

ஜெயின் மீதான வழக்கை நான் ஆய்வு செய்தேன். இது முற்றிலும் போலியானது மற்றும் அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டது. நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஜெயின் உண்மையின் பாதையில் செல்கிறார், அவர் சுத்தமாக வெளியே வருவார் என்று அவர் கூறினார். 

ஹவாலா பணப் பரிவர்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். 

கடந்த ஜனவரியில், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படலாம் என்று ஆதாரங்களிலிருந்து தெரிந்து கொண்டதாக கேஜரிவால் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT