Karnataka schools to include lesson on Puneeth Rajkumar 
இந்தியா

கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் புனித் ராஜ்குமாரின் சாதனைகள்: பொம்மை

மறைந்த நடிகர் புனித் ராஜ்மாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

DIN

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக முதல்வர் பொம்பை கூறியதாவது, 

நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது. கர்நாடகம் மற்றும் கன்னட மொரிககு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் கௌரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இது கன்னட ராஜ்யோத்சவத்தின் சிறப்பம்சமாகும். அவர் பலவித மனிதாபிமானப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். 

புனித் ராஜ்குமாரின் சாதனைகள் குறித்துப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம் என்றார். 

மேலும், அவர் தனது உறுப்புகளை தானம் செய்தவர். இது அவரது சேவையைப் பற்றிப் பேசுகிறது. அவரது மறைவுக்குப் பின், பலர் தங்கள் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர். புனித் ராஜ்குமார் குறுகிய காலத்தில் உத்வேகம் தரும் பணியையும் சேவையையும் செய்துள்ளார். எங்களால் முடிந்தவரை அவருடைய செய்தியை முன்னெடுத்துச் செல்வோம் என்றார். 

மாநிலத்தில் கன்னடத்தைக் கட்டாயமாக்க, தனது அரசு சட்டம் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT