ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்) 
இந்தியா

ஹிமாசலின் சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் பறித்தது: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் ஆட்சியில் ஹிமாசலப் பிரதேசம் தனது சிறப்பு அந்தஸ்தை இழந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

DIN


காங்கிரஸ் ஆட்சியில் ஹிமாசலப் பிரதேசம் தனது சிறப்பு அந்தஸ்தை இழந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

ஹிமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மந்திரிகாட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஜெ.பி.நட்டா,

ஹிமாசல் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி நீக்கிவிட்டது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஹிமாசலுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. ஹிமாசலை லே மற்றும் லடாக் பகுதியுடன் இணைக்கும் அடல் சுரங்கப் பாதை தொடங்கியதும், கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் எனக் குறிப்பிட்டார். 

ஹிமாசலப் பிரதேசத்திற்கு நவம்பா் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 
 
மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தற்போது ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

நடபெறவுள்ள தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் களமிறங்கியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT