இந்தியா

ராகுல் நடைபயணம்: காவலர்கள் தள்ளியதில் முன்னாள் அமைச்சர் காயம்

ஒற்றுமைக்கான நடைபயணத்தின்போது காவல்துறையினர் தள்ளியதில் கீழே விழுந்த மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நிதீன் ரெளத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

DIN

ஒற்றுமைக்கான நடைபயணத்தின்போது காவல்துறையினர் தள்ளியதில் கீழே விழுந்த மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நிதீன் ரெளத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணமானது தமிழகத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்த தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வருகின்றது.

இந்த நடைபயணமானது மகாராஷ்டிர மாநிலத்தை அடையவுள்ள நிலையில் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிதீன் ரெளத், தெலங்கானாவிலேயே ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று காவல்துறை தள்ளியதால் கீழே விழுந்ததாக கூறப்படும் நிதீன் ரெளத் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அவருக்கு தலை, கை, கால் மற்றும் வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஓபன் மகளிா் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்!

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

பிடாரம்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

விளாத்திகுளம் எம்எல்ஏ மக்கள் குறைகேட்பு

SCROLL FOR NEXT