இந்தியா

குஜராத் மாடல் வேண்டாம் ராஜஸ்தான் மாடலுக்கு வாங்க: அசோக் கெலாட்

குஜராத் மாடல் புறக்கணிக்கப்பட்டு ராஜஸ்தான் மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டுமென ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

DIN

குஜராத் மாடல் புறக்கணிக்கப்பட்டு ராஜஸ்தான் மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டுமென ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய கெலாட் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: சிரஞ்ஜீவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் போன்றவை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். ராஜஸ்தான் மாநில அரசு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் செயல்படுத்தப்படாத முதியோருக்கான ஓய்வூதிய திட்டத்தை எங்களது அரசு செயல்படுத்தியுள்ளது. பாஜக ஓய்வுதியத் திட்டம் குறித்து வெறும் அறிவுப்புகளை மட்டுமே வெளியிட்டது. ஆனால், ராஜஸ்தான் அரசு அதனை செயல்படுத்தியுள்ளது.

அனுபிரதி திட்டத்தின் கீழ் 200 மாணவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். இது போன்ற முயற்சிகளுக்காக மத்திய அரசு ராஜஸ்தான் அரசுக்கு பாராட்டு தெரிவித்து ஊக்கமளிக்க வேண்டும். ராஜஸ்தான் அரசு மக்களின் நன்மைக்காக நேர்மறையான எண்ணங்களுடன் சேவையாற்றி வருகிறது. ஆனால், பாஜக தலைமையிலான அரசு அதனை செய்ய மறுக்கிறது. 

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜவுக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் நிலவுகிறது. அதன் காரணத்தினாலேயே பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி குஜராத் செல்வதை நம்மால் காண முடிகிறது. ராஜஸ்தானில் எங்களது அரசுக்கு எதிராக இதுபோன்று மக்கள் அதிருப்தியில் ஏதும் இல்லை. நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியிலும் பிரச்னைகள் என்பது இருக்கிறது. ஒருவர் கட்சியில் உள்ள பிரச்னையை சரி செய்ய பார்க்க வேண்டும். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அவர்கள் எங்களுக்கு மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைப்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT