இந்தியா

பந்தர்பூர் விட்டல் கோயிலில் மகா பூஜை செய்தார் ஃபட்னாவீஸ்!

DIN

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் உள்ள புகழ்பெற்ற விட்டல் கோயிலில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவரது மனைவி அம்ருதாவுடன் மகா பூஜை செய்தார்.

இந்தாண்டு கார்த்திகை ஏகாதசியை வார்காரி தம்பதிகளான உத்தம்ராவ்-கலாவதி சலுங்கே ஆகியோர் பட்னாவீஸ், அவரது மனைவியுடன் வழிபாடு செய்யும் வாய்ப்பைப் பெற்றனர். 

வழிபாட்டுக்குப் பிறகு பட்னாவீஸ் கூறுகையில், 

முதல்வராக இருந்தபோது ஆஷாதி ஏகாதசியின் போது மகாபூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கார்த்திகை ஏகாதசியான இன்று பிரார்த்தனை செய்ய மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனது அதிர்ஷ்டம் என்றார். 

மேலும் வார்காரி பிரிவினரின் பங்களிப்பைப் பாராட்டினார். பல படையெடுப்புகள் இருந்தபோதிலும், வார்க்காரிகள் பகவத் தர்மத்தின் கொடியை உயர்வாக வைத்திருந்தனர். 

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆஷாதி ஏகாதசிக்காக பந்தர்பூருக்கு வந்திருந்தபோது, ​​நாட்டின் பிற மதத் தலங்களில் உள்ள பல்வேறு வழித்தடங்களின் வளர்ச்சியின் வழியில் கோயில் நகரத்தை மேம்படுத்துவது குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். 

மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கோயிலுக்கு நல்ல வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். வரும் நாள்களில், மாநில அரசு அதைச் செயல்படுத்தும் என்றார் பட்னாவீஸ். 

இதுதொடர்பாக யாரையும் வற்புறுத்தாமல், நிலம் கையகப்படுத்தும் பட்சத்தில் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி பணிகளைத் தொடங்குவோம் என்று அவர் உறுதியளித்தார். 

மேலும் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் வாரி மரபுக்கு இடையூறு ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT