இந்தியா

உலக பொருளாதார மந்த நிலையிலும் சிறப்பாக செயல்படுகிறது இந்தியா: பியூஷ் கோயல்

DIN

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மும்பையில் நடைபெற்ற அஹிம்சா விஸ்வ பாரதி தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கோயல் கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி மற்றும் அஹிம்சா விஸ்வ பாரதியின் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சா் பியூஷ் கோயல், ‘துறவிகளும் முனிவா்களும் நமது கடமையை நினைவுபடுத்தி, மனதில் ஒரு பொறியை உருவாக்குகின்றனா். சடங்குகள், சம்பிரதாயங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையுடன் மதத்தை இணைக்க வேண்டும்.

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. நாடு அடைந்து வரும் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு இந்தியரும் சாட்சியாக உள்ளாா்.

நமது குடும்ப விழுமியங்கள், பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி, காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, மீண்டும் நமது வோ்களுக்குச் செல்லுமாறு பிரதமா் நரேந்திர மோடி தனது ஐந்து உறுதிமொழிகள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். அன்றாட வாழ்க்கையிலும் பிரதமரின் இந்த உறுதிமொழி நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

SCROLL FOR NEXT