இந்தியா

சோலாப்பூரில் 150 மெகாவாட் சோலார் திட்டத்தை நிறுவும் டாடா பவர் நிறுவனம்

DIN


புதுதில்லி: மகாராஷ்டிரத்தில் 150 மெகாவாட் திறன் கொண்ட சோலார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான லெட்டர் ஆஃப் அவார்டு கிடைத்துள்ளதாக டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி தெரிவித்துள்ளது.

மின் கொள்முதல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பவரின் துணை நிறுவனமான டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி, மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் 150 மெகாவாட் சோலார் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகாராஷ்டிர மாநில மின்சார விநியோகக் கழகத்திடமிருந்து லெட்டர் ஆஃப் அவார்டு பெற்றுள்ளது.

இதுபற்றி டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் கன்னா கூறுகையில், பசுமையான எதிர்காலத்தை நோக்கி நகருவதற்கான, நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க இது அமைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT