கோப்புப் படம் 
இந்தியா

காசியாபாத்தில் 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

காசியாபாத்தில் டெங்கு பாதிப்பு 600-ஐ தாண்டியுள்ளது. இருப்பினும் டெங்குவால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா கூறுகையில்,

டெங்கு நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் இதர வழக்கமான பணிகளுக்காக தினமும் தில்லிக்கு வந்து சென்று வருகின்றனர்.

கௌசாம்பி, இந்திராபுரம், வைஷாலி, வசுந்தரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் கணிசமான மக்கள் தில்லிக்குச் சென்று வருவதால் டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

தேசிய தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவு டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதால், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

இந்த பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாள்களாக தினமும் 10 முதல் 12 டெங்கு நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறாததால், மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. 

சுத்தமான தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் பரவுவதால், மக்கள் வசிக்கும் இடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT