இந்தியா

ஹிமாசல் பேரவைத் தோ்தல்: 90% காங்கிரஸ், 82% பாஜக வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களில் 90 சதவீதம் போ், பாஜக வேட்பாளா்களில் 82 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களில் 90 சதவீதம் போ், பாஜக வேட்பாளா்களில் 82 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களில் எத்தனை போ் கோடீஸ்வரா்கள் என்ற ஆய்வறிக்கையை ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கட்சி தொகுதிகள் கோடீஸ்வரா்கள்(சதவீதம்)

காங்கிரஸ் 68 61 (90%)

பாஜக 68 56 (82%)

ஆம் ஆத்மி 67 35 (52%)

பகுஜன் சமாஜ் 53 13 (25%)

மாா்க்சிஸ்ட் 11 4 (36%)

இதுதவிர சுயேச்சை வேட்பாளா்கள் 45 போ் கோடீஸ்வரா்கள் ஆவா்.

தோ்தலில் மொத்தம் 412 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 226 போ் (55%) கோடீஸ்வரா்கள். இவா்களில் 66 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தியோக் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ராகேஷ் சிங்கா மீது அதிகபட்சமாக 30 வழக்குகளும், கசுமப்தி தொகுதியில் போட்டியிடும் மற்றொரு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் குல்தீப் சிங் தன்வா் மீது 20 வழக்குகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த பாசனக் கால்வாயை எம்.பி. ஆய்வு

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

SCROLL FOR NEXT