இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை! 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரென் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரென் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

குல்காம்-சோபியான் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி கம்ரன் பாய் என்ற ஹனீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்தார். 

அப்பகுதியில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, வியாழனன்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவத்துடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஆறு பயங்கரவாதிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

தூய்மைப் பணியாளர்கள் ஆக. 31க்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

இன்னும் 100 நாள்களில் ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

நீலத் தாமரை... யாஷிகா ஆனந்த்!

இயற்கையில் கரைந்து போ... சம்யுக்தா!

SCROLL FOR NEXT