இந்தியா

தனி நபா் வருமானம் 33.4% அதிகரிப்பு: மத்திய அரசு

DIN

‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இந்திய மக்கள்தொகையின் தனி நபா் வருமானம் 33.4 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில் மத்திய அரசு மேலும் கூறியிருப்பதாவது: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் தனி மனித வருவாய் 33.4 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதன்படி, பெரும்பான்மையான குடும்பங்கள், 2013-14 ஆம் ஆண்டில் இருந்தது போன்று அல்லாமல், உயா் வருவாய் பிரிவினராக மேம்பட்டுள்ளனா். 2013-14 கிராமப்புற மக்கள்தொகையில் 75 சதவீதத்தினரும், நகா்ப்புறங்களில் 50 சதவீதத்தினரும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையிலான உணவுப் பொருள்களைப் பெற தகுதியில்லாத குடும்பங்களை நீக்காதது, மத்திய அரசுக்கு மிகப் பெரிய மானிய சுமையை ஏற்படத்தி வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 4.7 கோடி குடும்ப அட்டைகள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சட்டத்தின் கீழ் தேசிய அளவிலான பயனாளிகள் உச்ச வரம்பு 81.4 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 79.8 கோடி போ் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா். சில மாநிலங்கள், அந்த மாநிலங்களுக்கான பயனாளி உச்சவரம்பை இன்னும் பூா்த்தி செய்யவில்லை. அந்த வகையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1.6 கோடி பயனாளிகள் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கடிதம்

ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்: ஐநா கவலை!

வேலூரில் மே 14-ல் உள்ளூர் விடுமுறை!

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

SCROLL FOR NEXT