கோப்புப்படம் 
இந்தியா

மும்பையில் பெண் யாசகர் அடித்துக்கொலை: ஒருவர் கைது

மும்பையில் பெண் யாசகரை அடித்துக்கொன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

மும்பையில் பெண் யாசகரை அடித்துக்கொன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம், மகாலட்சுமியின் தோபி காட் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் யாசகர் சாரதா கேசவ் வாக்மரே(65) தனது பையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சாரதாவிடமிருந்து அந்த பையை திருட முயன்றுள்ளார். இந்நிகழ்வின்போது கண் விழித்த சாரதா அந்த பையை கொடுக்க மறுத்திருக்கிறார். 

இதனால் ஆத்தமுற்ற அந்த மர்ம நபர் பெண் யாசகர் சாரதாவை தரையில் தள்ளி மோசமாக அடித்துக் கொன்றார். பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச்சென்றார். இச்சம்பவம் தொடர்பாக அக்ரிபாடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் சுபம் என்பரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

கைதான சுபம் மீது மும்பையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT