இந்தியா

ஜார்க்கண்டில் முர்மு: பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி!

DIN

ஜார்க்கண்ட் தலைநகருக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்குச் சென்று, அவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி ஜன்ஜாதிய கெளரவ் திவாஸ் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை  9 மணியளவில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய குடியரசுத் தலைவர் முர்முவை ஜார்க்கண்ட் ஆளுநர் ராமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் வரவேற்றனர். 

அங்கிருந்து அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பிர்சா முண்டாவின் கிராமமான உலிஹாட்டுக்குச் சென்றார். அங்கு அவர் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் அவருடன் இணைந்தனர்.

முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக மாநிலத்திற்கு வருகை தரும் நிலையில், கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முர்மு. 

பாதுகாப்பு காரணங்களுக்காக பொது மக்கள் முக்கிய அரங்கிற்குள் அனுமதிக்கப்படாவிட்டாலும், பிர்சா முண்டா ஆதரவாளர்கள், பாரம்பரிய உடையில் அணிவகுத்து, குடியரசுத் தலைவரைக் காண சாலையின் இருபுறமும் குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

SCROLL FOR NEXT