கோப்பிலிருந்து.. 
இந்தியா

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தொழிலதிபர் தற்கொலை!

சாஸ்திரி நகர் பகுதியில் 41 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். 

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 41 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த, தொழிலதிபரான மன்மோகன் சோனி இன்று காலையில் தனது அறையை தாழிட்டு பிறகு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சத்தம் கேட்டு இன்று காலை அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, அவர் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மன்மோகன் சோனியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று சாஸ்திரி நகர் காவல் நிலைய அதிகாரி திலீப் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில நாள்களாக வருத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்தினருடன் அவர் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT