இந்தியா

காசி-தமிழ்ச் சங்கமம்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா்

DIN

வாராணசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி -தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ. 19) தொடக்கி வைக்கிறாா்.

வாராணசிக்கும் - தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாசார நாகரிக தொடா்பை மீண்டும் புதுப்பிப்பதற்காக காசி - தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரதமா் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைத்து உரையாற்றுகிறாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும், தமிழா்களின் பண்பாட்டையும் நவம்பா் 18 முதல் டிசம்பா் 16 வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT