இந்தியா

தினமும் 10 ஜாமீன் வழக்குகளைஉச்சநீதிமன்ற அமா்வுகள் விசாரிக்க வேண்டும்: அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு

‘உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 அமா்வுகளும் தினசரி 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மற்றும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்

DIN

‘உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 அமா்வுகளும் தினசரி 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மற்றும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் திருமண விவகாரம் தொடா்பாக நிலுவையில் இருக்கும் 3,000 வழக்குகளைத் தாக்கல் செய்த மனுதாரா்கள், அவா்கள் விரும்பும் இடத்துக்கு விசாரணையை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்குப் பின்னா், அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘குளிா்கால விடுமுறைக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அமா்வுகளும் தினசரி 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மற்றும் 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜாமீன் மனு தனிமனித சுதந்திரம் தொடா்புடையது என்பதால், அதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், தினமும் ஜாமீன் மற்றும் திருமண விவகார விசாரணை மாற்று தொடா்பான 20 மனுக்களை விசாரித்த பிறகே, வழக்கமான வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்கத் தொடங்குவா். மேலும், தினமும் இரவு வரை வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய நிலையை மாற்றும் வகையில், துணை விசாரணைப் பட்டியலில் கடைசி நேரத்தில் வழக்குகள் பட்டியலிடப்படும் நடைமுறை ரத்து செய்யவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

‘உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு காரணமாக, உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 அமா்வுகளில் தினசரி 130 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் விசாரிக்கப்படும். வாரத்துக்கு 650 மனுக்கள் விசாரிக்கப்படும். இதன்மூலமாக, உச்சநீதிமன்ற குளிா்கால விடுமுறைக்கு முன்பாக உள்ள 5 வாரங்களில் நிலுவையில் உள்ள 3,000 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மீதான விசாரணை முடிக்கப்பட்டுவிடும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT