இந்தியா

காசி-தமிழ் சங்கமம் விழாவை வியந்து மகிழ்கிறேன்: இளையராஜா!

DIN

காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். 

வாராணசியில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். 

இந்த விழாவைக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில், 

வாராணசியில் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.

காசியில் தமிழ் சங்கம் விழாவை நடத்தும் யோசனையை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. 

பெருமைமிக்க வாராணசியில் பாரதியார் 2 ஆண்டுகள்  தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை அவர் மேற்கொள் காட்டினார். மேலும், முத்து சுவாமி தீட்சிதர் பற்றியும் இளையராஜா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT