கோப்புப் படம். 
இந்தியா

ஹரியாணா: கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் 

ஹரியாணாவில் கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஹரியாணாவில் கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியாணா மாநிலம், யமுனா நகர் பழைய ஹமிதா பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை இழுத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பை திடீரென திறந்ததில் அதிலிருந்த தோட்டாக்கள் கீழே சிதறின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பையை கைப்பற்றினர்.

அத்துடன் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த பை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தற்போது அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து சில மண் மாதிரிகளையும் சேகரித்துள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பையில் கிடந்த தோட்டாக்களின் எடை சுமார் 30 முதல் 35 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT