இந்தியா

குடியரசுத் தலைவருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை

DIN

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு (64) தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண் புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வலது கண்ணில் ஞாயிற்றுக்கிழமை கண் புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தில்லி ராணுவ மருத்துவமனையில் இருந்து அவா் வீடு திரும்பிவிட்டாா். முன்னதாக, அவரது இடது கண்ணில் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி கண் புரைக்கான அறுவைச் சிகிச்சை இதே ராணுவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை 25-ஆம் தேதி திரௌபதி முா்மு பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன் தம்பதி!

மேற்கு வங்க ரயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து!

சென்னை மக்கள் கவனத்துக்கு.. மழை அறிவிப்பு!

மகாராஜா வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT