இந்தியா

ஷ்ரத்தா கொலை வழக்கு: நண்பர்கள் உள்பட 11 பேரிடம் விசாரணை

DIN


ஷ்ரத்தா கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரிடம் தில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷ்ரத்தாவின் நண்பர்காளான, லஷ்மன் நாடார், ராகுல் ராய், கோட்வின்,  ஷிவானி மற்றும் அவரின் கணவர், ஷ்ரத்தாவின் கரண் பாரி, ஷ்ரத்தா - அஃப்தாப் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஜெய ஸ்ரீ, மற்றும் அஃப்தாப் குடும்பத்தார் உள்ளிட்டோரிடம் தில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மொஹராலி காட்டு பகுதியில் இருந்து மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடைப் பகுதி, வெட்டப்பட்ட சில எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, தாடை எலும்புகள் யாருடையது என்பது குறித்து கண்டறிய, தில்லியிலுள்ள பிதுரி பல் மருத்துவமனையில் மருத்துவர்களின் இரண்டாம் கட்ட கருத்து குறித்து காவல் துறையினர் கேட்டறிந்தனர்.

ஷ்ரத்தா வழக்கு விசாரணை

மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, ஷ்ரத்தாவின் முந்தைய பல் மருத்துவ சிகிச்சையின் தரவுகள் கிடைத்தால் மட்டுமே தற்போது கிடைத்துள்ள தாடை எலும்பு குறித்து உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர். 

காவல் துறையினரின் தகவலின்படி மும்பையில் பல் மருத்துவமனையில் ஷ்ரத்தா வேர் சிகிச்சை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. 

தில்லி மருத்துவர்கள் அளித்த தரவுக்கோப்புகளுடன் காவல் துறையினர் மும்பை சென்று விசாரணையைத் தொடரவுள்ளனர். மேலும், குற்றவாளியான அஃப்தாப் ஒன்றுக்கு மேற்பட்ட தொலை பேசி எண்களைப் பயன்படுத்தினாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, குற்றவாளி அஃப்தாப் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. விசாரணையின்போது தொலைப்பேசி கட்டண ரசீதுகளைக் கைப்பற்றும்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. மும்பையிலிருந்து தில்லிக்கு பொருள்களை ஏற்றிச்சென்றதற்கு ஒரு எண்ணையும், தில்லியில் குளிர்சாதனப் பெட்டி வாங்கிய கடையில் மற்றொரு எண்ணையும் அஃப்தாப் பயன்படுத்தியுள்ளதைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

மேலும், ஷ்ரத்தா - அஃப்தாப் ஆகியோருக்கு நெருக்கமான நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார் உள்ளிட்டோரிடம் தில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

ஷ்ரத்தாவின் நண்பர்காளான, லஷ்மன் நாடார், ராகுல் ராய், கோட்வின், ஷிவானி மற்றும் அவரின் கணவர், ஷ்ரத்தாவின் கரண் பாரி, ஷ்ரத்தா - அஃப்தாப் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஜெய ஸ்ரீ, மற்றும் அஃப்தாப் குடும்பத்தார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

ஷ்ரத்தா கொடூரக் கொலை

ஷ்ரத்தா வால்கருடன் ஒரே வீட்டில் வசித்துவந்த அஃப்தாப் அமீன்,  சின்னச் சின்ன சண்டைகளுக்கே கொடூரமாகத் தாக்கியதால், பலத்த காயமடைந்து ஷ்ரத்தா சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது ஷ்ரத்தா எடுத்துக்கொண்ட காயங்களுடன் கூடிய புகைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். 

மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார். 

தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொண்ட அஃப்தாபிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. 

ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT