தேஜஸ்வி யாதவ் - ஆதித்ய தாக்கரே 
இந்தியா

மோடிக்கு எதிராக.. நிதீஷ், தேஜஸ்வியுடன் கூட்டணி சேரும் சிவசேனை?

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

DIN

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

மேலும், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, கட்சி செயலாளர் அனில் தேசாய் ஆகியோரும் உடன் இருந்தார். 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து பிரதமர் மோடிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும் மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

அந்தவகையில் சிவசேனை கட்சியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.வாகவுள்ள ஆதித்ய தாக்கரே  ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்திலும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

SCROLL FOR NEXT