இந்தியா

அகாதெமியைத் தொடர்ந்து உணவு டெலிவரி சேவையையும் நிறுத்த அமேசான் முடிவு!

'அமேசான் அகாதெமி'யைத் தொடர்ந்து உணவு விநியோக சேவையை நிறுத்த முடிவு அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

DIN

'அமேசான் அகாதெமி'யைத் தொடர்ந்து உணவு விநியோக சேவையை நிறுத்த முடிவு அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் பொருட்டு மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் 'அமேசான் அகாதெமி' யை மூட முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து உணவு டெலிவரி சேவையை நிறுத்தவும் அமேசான் முடிவு செய்துள்ளது. 

பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

SCROLL FOR NEXT