இந்தியா

முலாயம் சிங் யாதவுக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உ.பி. முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவுக்கு சிறப்பு மருத்துவா்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்

DIN

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உ.பி. முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவுக்கு சிறப்பு மருத்துவா்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சமாஜவாதி கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியிலிருந்து தில்லி குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருடைய உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், முலாயம் சிங்குக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருவதாக அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மகன் அகிலேஷ் யாதவ், மருமகள் டிம்பிள் யாதவ் மற்றும் சகோதரா் சிவ்பால் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் அகிலேஷ் யாதவை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனா். முலாயம் சிங்கின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்ய தயராக உள்ளதாக பிரதமா் மோடி அகிலேஷ் யாதவிடம் உறுதியளித்துள்ளாா் என சமாஜவாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT