அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் புதன்கிழமை காலை ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் புதன்கிழமை காலை ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.
தவாங் அருகே பயனித்து கொண்டிருந்த சீட்டா ஹெலிகாப்டர் காலை 10:00 மணியளவில் விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இரண்டாவது விமானி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும், விவரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விஜயதசமி... கிருஷ்ணகிரியில் எழுத்தறிவித்தல் விழா!
விபத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு ராணுவம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.