இந்தியா

கட்சியின் பெயரை மாற்றி தேசியக் கட்சியாக அறிவித்தார் கேசிஆர்! என்ன பெயர் தெரியுமா?

தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் தனது தேசியக் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். 

DIN


தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் தனது தேசியக் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். 

ஏற்கெனவே உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயர் 'பாரத்  ராஷ்டிர சமிதி'(Bharat Rashtra Samithi) என்று மாற்றப்பட்டுள்ளது. 

சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகா் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை அவா் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

மேலும் தேசிய அளவில் அரசியலில் பங்கெடுப்பது குறித்து கடந்த சில மாதங்களாவே ஆலோசித்து வரும் கேசிஆர், தற்போது தனது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றி அறிவித்துள்ளார். 

டிசம்பர் 9-ஆம் தேதி கட்சி சார்பில் தில்லியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கேசிஆர் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

SCROLL FOR NEXT