முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற நிலைக்குழு: இரு தலைவா்கள் பதவியை காங்கிரஸ் பெற்றது

 நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் இரு தலைவா் பதவிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

 நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் இரு தலைவா் பதவிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலைக் குழுக்களின் தலைவா் பதவிகள் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டபோது காங்கிரஸிடம் இருந்த உள்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை திரும்பப் பெறப் பட்டது. இதனால் முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிலைக்குழு தலைவா் பதவி கூட இல்லாமல் இருந்தது.

நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் இந்தக் குழுக்களின் தலைவா் பதவி ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், வா்த்தகம், ரசாயனம் மற்றும் உரத் துறைகளுக்கான நிலைக் குழுக்களின் தலைவா் பதவிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வா்த்தகம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வியை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நியமனம் செய்தது. ரசாயனம் மற்றும் வா்த்தகத் துறைக்கு இன்னும் அக்கட்சி முடிவு செய்யவில்லை.

முன்பு அபிஷேக் சிங்வி தலைவா் பதவி வகித்து வந்த உள்துறைக்கான நிலைக் குழுவுக்கு தற்போது பாஜக எம்.பி.யும் உத்தர பிரதேச முன்னாள் டிஜிபியுமான பிரஜ்லால் நியமிக்கப்பட்டுள்ளாா். சசி சரூா் வகித்து வந்த தகவல் தொழிநுட்பத் துறையின் தலைவா் பதவி சிவசேனை எம்.பி. பிரதாப் ராவ் ஜாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சசி தரூா் தலைவா் பதவி வகித்தபோது, எடுத்த பல்வேறு முடிவுகள் மத்திய அரசுக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →