இந்தியா

5 ஆண்டுகளில் அசாம் வெள்ளத்திற்கு தீர்வு காணப்படும்: அமித் ஷா

DIN

5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுங்கள் அசாமில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திற்கான தீர்வு கிடைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

அசாமில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: “  நாங்கள் அசாம் மாநிலத்தை தீவிரவாதம், ஊழல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் இருந்து சுதந்திரமாக மாற்றுவதாக அறிவித்திருந்தோம். அதில் முதல் இரண்டு விஷயங்களும் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எங்களுக்கு இன்னும் 5 ஆண்டுகள் கொடுங்கள் அசாம் மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காணப்படும். அசாமில் ஆண்டுதோறும் வெள்ளத்தினால் ரூ.200 கோடி அளவிற்கு பொருட்சேதம் ஏற்படுகிறது. நாங்கள் அசாமின் நிலை குறித்து ஏற்கனவே ஆலோசித்துள்ளோம். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டம் வரும் நாட்களில் செயல்படுத்தப்படும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT