இந்தியா

தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியர்! ஆரத்தி எடுத்து வரவேற்ற வாடிக்கையாளர் (விடியோ)

தில்லியில் தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

DIN


தில்லியில் தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

இணையதள பயனர்கள் பெருகிவிட்ட சூழலில், கால மாற்றத்திற்கேற்ப மக்களும் பழகி வருகின்றனர். அதற்கு சான்றாக அமைந்துள்ளது தில்லியில் நடந்தேறிய நிகழ்வு. 

தில்லி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் உணவு, காய்கறிகளை டெலிவரி செய்து வருபவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், தில்லியில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்று இன்முகத்துடன் உணவை வாங்கியுள்ளார். இதனை விடியோவாகவும் பகிர்ந்துள்ளார். 

தில்லியைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் குமார், சொமேட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். தில்லியின் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மணி நேரம் தாமதமாக உணவு எடுத்துவந்த சொமேட்டோ ஊழியரை வரவேற்க ஒரு கையில் ஆரத்தி தட்டுடன் வாடிக்கை நெருங்கி ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து வரவேற்றுள்ளார். இதனை விடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தில்லி போக்குவரத்து நெரிசலில் ஒரு மணி நேரம் தாமதமானாலும் உணவு கொண்டு வந்து சேர்ந்த சொமேட்டோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

SCROLL FOR NEXT