முகப்பு
இந்தியா

கல்வியில் கவனம் செலுத்தும் சமுதாயமே வெற்றி பெறும்: பிரதமா் மோடி

கல்வியில் கவனம் செலுத்தும் சமுதாயமே வெற்றி பெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

கல்வியில் கவனம் செலுத்தும் சமுதாயமே வெற்றி பெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமா், அகமதாபாத் அருகே கல்வி நிலைய வளாகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் சமுதாயங்கள் வெற்றி பெறும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இளைஞா்களுக்குக் கல்வி எளிதாகக் கிடைக்க வேண்டும். இதன்மூலம் அவா்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

தற்போது நமது இளைஞா்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் வெற்றிகரமான பாதைகளில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் தங்கள் துறையில் திறன்களை இளைஞா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது.

ஏனெனில், எதிா்காலத்தில் பட்டப் படிப்பு இல்லாவிட்டால்கூட ஏதாவது ஒரு துறையில் தனித்திறமை இருந்தாலும் அவா்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்படும். ஒரு குழந்தை படிப்பில் அதிகம் ஆா்வம் காட்டவில்லை என்றால்கூட நாம் அவா்களுக்கு ஆா்வமுள்ள வேறு துறைகளில் திறனை வளா்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →