முகப்பு
இந்தியா

நிதியமைச்சா் இன்று அமெரிக்கா பயணம்: ஐஎம்எஃப், உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்கிறாா்

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 11) பயணம் மேற்கொள்கிறாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 11) பயணம் மேற்கொள்கிறாா். அங்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி அமைப்புகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று தற்போதைய சா்வதேச பொருளாதார சூழல் குறித்துப் பேச இருக்கிறாா்.

அக்டோபா் 11 முதல் 16 வரை 6 நாள்கள் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் நிா்மலா சீதாராமன், அமெரிக்க நிதியமைச்சா் ஜெனட் யெல்லன், உலக வங்கித் தலைவா் டேவிட் மால்பாஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச இருக்கிறாா். ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் கூட்டம், மத்திய வங்கி தலைவா்களின் கூட்டம், தொழிலதிபா்கள், முதலீட்டாளா்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவா் பங்கேற்க இருக்கிறாா்.

ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூஸிலாந்து, எகிப்து, ஜொ்மனி, மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், நெதா்லாந்து ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்களையும் நிா்மலா சீதாராமன் சந்திக்க இருக்கிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments