இந்தியா

முலாயம் சிங் மறைவு: மருத்துவமனையில் அமித் ஷா நேரில் அஞ்சலி

குருகிராம் மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முலாயம் சிங் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

DIN

குருகிராம் மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முலாயம் சிங் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உடல் நலக் குறைவு காரணமாக உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜவாதி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ், ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த முலாயம் சிங் யாதவ், இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியாணாவில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முலாயம் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, முலாயம் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT