இந்தியா

ராஜஸ்தானில் 1,190 மெகாவாட் சூரிய சக்தி ஆலையை அமைக்க கோல் இந்தியா திட்டம்

ராஜஸ்தானின் கோல் இந்தியா லிமிடெட் 1,190 மெகாவாட்  திறன் கொண்ட சூரிய சக்தி ஆலையை அமைக்கவுள்ளது.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோல் இந்தியா லிமிடெட் 1,190 மெகாவாட்  திறன் கொண்ட சூரிய சக்தி ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக, ராஜஸ்தான் வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் உடன் கோல் இந்தியா லிமிடெட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பிகானேர் மாவட்டத்தில், ராஜஸ்தான் வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 2,000 மெகாவாட் சோலார் பூங்காவில் சோலார் ஆலை அமைக்கப்படும்.

மாநில அரசு ஒதுக்கியுள்ள 4,846 ஹெக்டேர் நிலத்தில், ராஜஸ்தான் வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் 810 மெகாவாட் சோலார் திட்டத்தையும், கோல் இந்தியா லிமிடெட்  1,190 மெகாவாட் மின் திட்டத்தையும் அமைக்கவுள்ளன.

ராஜஸ்தான் வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சர்மா மற்றும் கோல் இந்தியா லிமிடெட் தொழில்நுட்ப இயக்குநர் ரெட்டி ஆகியோர் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT