கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் கோயிலுக்குள் நுழையவிடாமல் தலித் இளைஞர் தடுத்து நிறுத்தம்!

கர்நாடகத்தில் கோயிலுக்குள் நுழைய விடாமல் தலித் இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

கர்நாடகத்தில் கோயிலுக்குள் நுழைய விடாமல் தலித் இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவின் நிட்டூர் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இன்று காலை வெளிச்சத்துக்கு வந்தது.

முல்கத்தம்மா கோயிலில் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.

நிட்டூரைச் சேர்ந்த அனில் ராஜ் என்ற தலித் இளைஞர், முல்கத்தம்மா கோயிலில் உள்ள சுவாமிக்கு  பூஜை செய்ய பூ, தேங்காய், தூபவத்திகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஆனால் பூசாரி அவரை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, அவர் கொண்டுவந்த காணிக்கைகளை எடுக்கவும் மறுத்து, அவரை கோயிலுக்கு வெளியே தள்ளியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT