இந்தியா

பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி

DIN

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவுக்கு விதிக்கப்படும் 18 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செல்லும் என குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோதுமை, மைதாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குஜராத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்ப்பாயத்தை அணுகியது.

அதை விசாரித்த தீா்ப்பாயம், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டா, சப்பாத்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்பதால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சரியே எனக் கடந்த ஆண்டு ஜூனில் தீா்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக மேல்முறையீட்டு ஆணையத்தில் அந்நிறுவனம் முறையிட்டது.

அதன் மீதான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘‘பதப்படுத்தி விற்கப்படும் ரொட்டியையும் சப்பாத்தியையும் அப்படியே உண்ணலாம். ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவை மேலும் சமைத்து மட்டுமே உண்ண முடியும். மாவும் தண்ணீரும் மட்டுமே சோ்த்து சப்பாத்தி, ரொட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

அதே வேளையில், பரோட்டாவானது மாவுடன் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப உருளைக் கிழங்கு, உப்பு, எண்ணெய், பருப்புகள், காலிஃபிளவா், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைச் சோ்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே, பதப்படுத்திய பரோட்டாவுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி கோர முடியாது.

வாடிலால் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ரொட்டியில் மாவு மட்டுமே உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தால் விற்கப்படும் பரோட்டாவில் அதன் வகைக்கு ஏற்ப 36 முதல் 62 சதவீத மாவு மட்டுமே உள்ளது. எனவே, பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது சரியானதே’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்: ஐநா கவலை!

வேலூரில் மே 14-ல் உள்ளூர் விடுமுறை!

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

SCROLL FOR NEXT