இந்தியா

உ.பி.துணை முதல்வரின் வாகனம் விபத்தில் சிக்கியது

DIN

உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சென்ற வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிதேச மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லக்னௌவில் இருந்து கெரிக்கு இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் வாகனம், காவலர் வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இருப்பினும் 2 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 6 போலீசார் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த சம்பத்தைத் தொடர்ந்து துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அங்கிருந்து புறப்பட்டு லக்னௌ சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT