இந்தியா

ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு: அமுல் பால் விலை 2 ரூபாய் உயர்வு

DIN


புது தில்லி: குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கம் நாடு முழுவதும் விற்பனை செய்து வரும் அமுல் நிறுவனப் பால் பாக்கெட்டுகளின் விலை குஜராத் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

அமுல் நிறுவனத்தின் அதிக கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் பாக்கெட்டுகள் விலை ரூ.2 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு குஜராத் மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வையடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு ரூ.61லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இதே அமுல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமும் தனது பால் பாக்கெட்டுகளுக்கு தலா ரூ.2 அதிகரித்திருந்தது.

இந்த விலை உயர்வானது, அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகரித்திருப்பதை ஈடு செய்யும் வகையில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT