முகப்பு
இந்தியா

முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது, ஆளுநருக்கே இந்த சோதனையா?

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் முகநூல் பக்கம் இன்று (அக்டோபர் 15) ஹேக் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2022, 4:38 pm IST
பகிர்:

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் முகநூல் பக்கம் இன்று (அக்டோபர் 15) ஹேக் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது: இன்று (அக்டோபர் 15) காலை முதலே எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நான் புகார் அளித்துள்ளேன். எனது முகநூல் பக்கத்தினை மீண்டும் செயலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

Advertisement

Advertisement

முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்து பல மணி நேரம் ஆகியும் தற்போது வரை ஆளுநரின் பக்கம் செயலுக்கு வரவில்லை. அதேபோல அவரது முகநூல் பக்கத்தை ஹேக் செய்த பின்னர் பதிவிடப்பட்ட பதிவுகள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. ஹேக் செய்யப்பட்ட பிறகு ஆளுநரின் முகநூல் பக்கத்தில் மூன்று பதிவுகள் பதிவாகியுள்ளன. கட்டுமானப் பணிகள் தொடர்பான விடியோ அரபி வார்த்தைகளுடன் இடம் பெற்றுள்ளது.

ஆளுநரின் முகநூல் பக்கம் திரும்ப செயலுக்கு வருவதற்கு இன்னும் நேரம் தேவைப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments