இந்தியா

அப்துல் கலாம் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

DIN

முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், 

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு அஞ்சலிகள். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த குடியரசுத் தலைவராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பெரிதும் போற்றப்படுகிறார். 

இந்திய ஏவுகணைகளின் வளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர். கலாம் பல்வேறு துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ ஆகிய இந்தியாவின் இரண்டு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.

அறிவியல் மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய பணிக்காக 11வது குடியரசுத் தலைவரான கலாமுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

கலாம் ஜூலை 27, 2015 அன்று ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT