இந்தியா

சத்தீஸ்கர்: காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்

சத்தீஸ்கர் சட்டப்பேரவை துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா மாண்டவி மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலமானார். அவருக்கு வயது 58.

DIN

சத்தீஸ்கர் சட்டப்பேரவை துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா மாண்டவி மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலமானார். அவருக்கு வயது 58.

சத்தீஸ்கர் சட்டப்பேரவை துணைத் தலைவர், மனோஜ் சின்ஹா நெஞ்சு வலி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாம்தாரி நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தகவலை காங்கிரஸ் தகவல் தொடர்புப் பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா உறுதி செய்தார்.
 
மனோஜ் சின்ஹா, கன்கேர் மாவட்டத்தின் பானுபிரதாப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராவார். அஜித் ஜோகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2000 முதல் 2003ஆம் ஆண்டு வரை அமைச்சராகவும் மனோஜ் சின்ஹா பொறுப்பு வகித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT