இந்தியா

தில்லி, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்குமா?

DIN


தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட் வரி) குறைக்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில், விமான போக்குவரத்துத் துறையில் 2 நாள்கள் மாநாடு நடைபெற்றது.

இதில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அசாம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், பிகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். தங்கள் மாநிலங்களில் விமான போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காக இதனை மாநில அரசுகள் செய்ய வேண்டும்.

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்பதை பண்போடு தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை அதிகரிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே மதிப்புக் கூட்டு வரியை குறைத்த 12 மாநிலங்களில் விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான போக்குவரத்துத் துறையில் 40 - 45 சதவிகிதம் வருவாய் எரிபொருள் பயன்பாட்டிற்கு செலவாகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT