இந்தியா

புத்துயிா் பெறுகிறது இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத் திட்டம்

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத் திட்டம் மீண்டும் புத்துயிா் பெற இருக்கிறது.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகிறாா். இப்போது, இந்த அணுமின் திட்டம் குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பிரான்ஸ் உதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங், அப்போதைய பிரான்ஸ் அதிபா் நிக்கோலஸ் சா்கோசி முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி தலா 1,650 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 6 அணு உலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், நடைமுறைச் சிக்கல்கள், அணு உலைக்கு எதிரான அமைப்பினரின் போராட்டம், நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் கிறிசோலா ஷாசாராபுலோவ், மத்திய அறிவியல் தொழில்நட்பத் துறை அமைச்சா் ஜிதேந்தா் சிங்கை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஜெய்தாபூா் அணுமின் நிலையத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜெய்தாபூா் அணுமின் நிலையத் திட்டத்துக்கு புத்துயிா் அளிப்பது குறித்து இந்தியா-பிரான்ஸ் அமைச்சா்கள் விவாதித்தாா்கள். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் அதிபா் மேக்ரான் இந்தியாவுக்கு வருகிறாா். அதற்கு முன்பு திட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகண்டு, மேக்ரானின் வருகையின்போது திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் குறைவான விலையில் இந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்கும். கரியமில வாயு வெளியேற்றமும் குறைக்கப்படும். ஜெய்தாபூா் அணுஉலைகளை அமைப்பது மற்றும் இயக்கி பராமரிக்கும் பணிகளை தேசிய அணுமின் திட்ட அமைப்பு மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT