இந்தியா

லஷ்கா் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்: இருவா் பலி

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லஷ்கா் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லஷ்கா் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளா்களைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடா்கதையாகி வரும் நிலையில், தற்போதைய சம்பவம் தொடா்பாக லஷ்கா் பயங்கரவாதி ஒருவா், மற்றொரு சந்தேக நபா் என 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காஷ்மீா் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் விஜயகுமாா் கூறியதாவது:

தாக்குதலில் உயிரிழந்த இரு தொழிலாளா்களும் உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சோ்ந்த மோனிஷ் குமாா், ராம் சாகா் ஆவா். சோபியானின் ஹா்மென் பகுதியில் இருவரும் தங்கியிருந்த தகர கொட்டகை மீது லஷ்கா் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் படுகாயமடைந்த அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT