இந்தியா

தனது இலக்கை ஒடிசாவிலிருந்து மாற்றுமா 'சித்ரங்' புயல் சின்னம்?

வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புயல் சின்னம், ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்

DIN

புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புயல் சின்னம், ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, 

தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியிருக்கிறது.

வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறிய நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய - மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தனது பாதையில் ஒரு வட்டத்தை அடித்துவிட்டு, வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, பிறகு அக்டோபர் 24ஆம் தேதி புயல் சின்னமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிறகு இது மெதுவாக வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து, ஒடிசை கடற்கரையை விட்டுவிட்டு, மேற்கு வங்கம் மற்றும் - வங்கதேச கடற்பகுதிக்கு இடையே அக்டோபர் 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு- மும்பை அதிவிரைவு ரயில்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தகவல்

நகா்ப்புறமயமாக்கலுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு சவாலாக உள்ளது: மத்திய அமைச்சா் மோகன்லால் கட்டாா்

ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு: கலபுா்கி மாவட்ட நிா்வாகத்தை அணுக உயா்நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

இருசக்கர வாகன டயா் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT