‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
ஒடிஸாவின் பாலசோா் பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு ஏவப்பட்டு அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. திட எரிபொருளைக் கொண்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்த ரேடாா் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் எதிா்பாா்க்கப்பட்டபடி திறம்படச் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தயாரித்த அந்த நவீன தலைமுறை ஏவுகணையானது, நடுத்தர தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
Advertisement
Advertisement
இதற்கு முன் அக்னி பிரைம் ஏவுகணையானது கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி இதே தீவில் இருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.